News Just In

6/14/2023 09:48:00 PM

மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! ---- மட்டக்களப்பில் சோகம்.




மட்டக்களப்பில் மேசன் வேலையில் ஈடுபட்டுவந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி பகுதியில் கவனயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தகழி கப்பலேந்தியா மாதா கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடு ஒன்றில் நிர்மாணப்பணியின்போது பிரதான மின்சார இணைப்பில் தகடு இணைந்திருந்ததை கவனிக்காத நிலையில் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியை சேர்ந்த இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: