News Just In

6/26/2023 08:20:00 PM

2009 இனப்படுகொலைக்கு நீதிவேண்டும் - பிரித்தானியாவில் ஈழத்தமிழர் மத்தியில் பா.ஜ.க அண்ணாமலை1

 2009 இனப்படுகொலைக்கு நீதிவேண்டும் - பிரித்தானியாவில் ஈழத்தமிழர் மத்தியில் பா.ஜ.க அண்ணாமலை




பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கு. அண்ணாமலை பிரித்தானியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது கடந்த 23.06.2023 அன்று ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து உலகத் தமிழர் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 2009 இனப்படுகொலைக்கு சரியான தீர்வை பெற்றுத்தர கோரியும், இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினர் படும் இடர்களுக்கான இணக்கப்பாடு, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவாகரம், மலையக தமிழர்களின் உரிமை பலப்படுத்தல், இலங்கை இந்தியா வாழ் அகதிகளின் ஆதரவு என பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்ந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஈழத் தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: