நூருல் ஹுதா உமர்
பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 ற்கு அமைவாக அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய மொழித்தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களம் பயிற்சி நெறியின் (மட்டம் ii) இறுதி நாள் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (12) நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தார் ஏ.சி.எம். பழில், சிங்கள மொழி வளவாளர் ஏ.எம்.எம்.முஜீப், பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.எச்.எம். முபாறக் , இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி விடய உத்தியோகத்தர் ஏ.ஆர்.எப். அஸ்ரினா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments: