News Just In

4/20/2023 06:55:00 PM

பிரதேச செயலகத்திற்கு முன்னார் கவன ஈர்ப்பில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சியினர்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு(பட்டிப்பளை) பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (20.04.2023) நடைபெற்றது. இந்நிலையில் அக்குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் குறித்த பிரதேச செயலக வாயிற் கதவின் முன்னால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கிளை ஏற்பாடு செய்திருந்த இக்கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும், உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் இலங்கத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை அரசே வரியை அறவிட்டு ஏழை வயிற்றில் அடியாதே, பாழடைந்த வீதியை உடனே திருத்து, அரசே மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்காதே, எமது மண் வளத்தை விற்று வயிறு வளர்க்காதே, படகுப் பாதையில்; கட்டணம் அறவீடு செய்வதை உடன் நிறுத்து, உள்ளிடட் வாசகங்கள் எழுதப்பட்டு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படக்குப்பாதை, மற்றும், குருமண்வெளி – மண்டூர் படகுப்பாதையில் பணயம் செய்யும் பிரயாணிகளிடம் கட்டணம் அறவீடு செய்வதை உடன் நிறுத்த வேண்டும், மிக நீண்ட காலமாக பழுதடைந்துள்ள அம்பிளாந்துறை – பட்டிப்;பளை பிராதான வீதியை புணரமைப்புச் செய்து தரவேண்டும், அப்பகுதியில் இருந்து மண் அகழப்படுவதைத் தடுத்தல் வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அவர்கள் கவன ஈர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் உரையாடினார்.
பாதை போக்குவரத்தில் பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து கட்டணம் அறவீடு செய்வதை தடுக்கமாறு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அதனை கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைத்தல், அப்பகுதி மண் அகழ்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கையை தான் மேற்கொள்வதாகவும், அம்பிளாந்துறை – பட்டிப்பளை பிரதான வீதி புணரமைப்புச் செய்வதற்க 8.5 கிலோ மீற்றர் வீதியை உலக வங்கி அபிவிருத்தித் திட்டத்pற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் கவன ஈர்ப்பிர் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 .எச்.ஹுஸைன்

No comments: