News Just In

2/09/2023 07:58:00 AM

இலங்கையில் தங்கம் வாங்க விரும்புவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி காணப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 192,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இருப்பினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: