நூருல் ஹுதா உமர்
தரத்தை நோக்கிய வீறுநடை எனும் தொனிப்பொருளின் கீழான கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விசேட கடமை சபதம் நிகழ்வு இன்று (13) பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை வழிநடாத்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம். மாஹிர் பிராந்திய பணிப்பாளர் சார்பாக தலைமையுரை நிகழ்த்தியதுடன் உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல் அவர்களினால் நற்சிந்தனையுடனான உரையொன்றும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் பிராந்திய மலேரியா மேற்பார்வை வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாத் விசேட விளக்கக்காட்சியுடன் உரை நிகழ்த்தியிருந்தார்.
இரண்டாம் கட்ட நிகழ்வாக தாய்சேய் நலப்பிரிவில் கடமையாற்றி விடுகை பெற்றுச் செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்வர் அவர்களுக்கு அதன் முன்னாள் பொறுப்பு வைத்திய அதிகாரியான வைத்தியர் எம்.ஏ.சீ.எம் .பசால் அவர்களும் தற்போதைய பொறுப்பு வைத்திய அதிகாரியான வைத்தியர் ஏ.எச். ரிஸ்பின் அவர்களும் இணைந்து கௌரவிப்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
No comments: