
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.மகாபொல உள்ளிட்ட கொடுப்பனவுகள் சரியாக வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உணவு விற்பனை நிலையங்களிலும் உணவுகளின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளதன் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் தமக்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதை விடவும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அப்பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: