News Just In

1/25/2023 10:31:00 AM

ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்கள்!








கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.

நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: