News Just In

12/09/2022 03:23:00 PM

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு?




பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

இந்த விலை அதிகரிப்பிற்கமைய, 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

No comments: