News Just In

12/20/2022 08:48:00 PM

உலகக்கிண்ணக் கோப்பையை அணைத்து தூங்கிய மெஸ்ஸி (புகைப்படம்)

பிரான்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

மூன்றாவது தடவையாக உலகக்கிண்ணப்பட்டத்தை வென்று உலகக்கோப்பை வரலாற்றில் மீண்டும் தன் பெயரை பொறித்ததுடன், நாட்டின் மூன்று தசாப்தகால கனவு நனவாக்கப்பட்ட நாளாகவும் பதிவு செய்தது.

அணியின் 35 வருட கனவை நனவாக்கிய பெருமைக்குரிய நட்சத்திரம் மெஸ்ஸி, வெற்றி பெற்ற உலகக்கிண்ணக் கோப்பையை அணைத்தவாறு தூங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளதுடன், "காலை வணக்கம்" எனக் கூறிய புன்னகைத்தவாறு இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
மெஸ்ஸி உவகக் கிண்ணக் கோப்பையுடன் நேரத்தை செலவிடுவதைக் காட்டும் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

No comments: