News Just In

12/20/2022 08:45:00 PM

ஜனாதிபதி ரணிலைத் திட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

பிரதேச சபை தேர்தல் நீண்ட காலமாக நடாத்தப்படாமல் உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் எதோ ஒரு வகையில் அவர்களது அபிப்பிராயங்களை கேட்கவேண்டிய நிலை வந்துவிட்டது.

ஆகையால் பிரதேச சபை தேர்தலை விரைவில் நடாத்தினால் நன்றாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை மஹாஜனா கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பந்தாட்ட மைதானத்தை திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: தேர்தலை இப்போதைக்கு நடாத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.

அவர்கள் தேர்தலை பிற்போடுவதற்குரிய வழிமுறைகளையே மேற்கொள்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு காலம் இருக்கின்றபடியால் பிரதேச சபை தேர்தல் கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு வேண்டுகோளை நாங்கள் முன்வைக்க முடியாது.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாடாளுமன்றத்தினால் யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து பெரும்பான்மையூடாக அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் உள்ளன.

அந்த காலம் முடிந்த பின்னர் தான் தேர்தல் வைக்க வேண்டும் என்பது சட்ட ரீதியாக இருக்கிறது. சட்டம் சொல்கிறது கால எல்லை முடிந்த பின்னர் தான் தேர்தல் வைக்க முடியும் என்று. ஜனநாயக நாட்டில் மக்களுடைய அபிப்பிராயங்களுக்கு செவிசாய்த்து தேர்தல்தலை விரைவில் நடாத்த வேண்டும் என்றார்.

No comments: