News Just In

12/04/2022 08:03:00 AM

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனையில் 42 வயதுப் பெண் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் 42 வயது பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 08 கிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 1 கிராம் 400 மில்லி கிராம் என்பன கைப்பற்றப்பட்டுளன.

கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: