News Just In

12/21/2022 02:14:00 PM

13வது திருத்தம் முஸ்லிம் சமூக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்களை எச்சரித்த சுற்றாடல் அமைச்சர்




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழா,2023ல் நடைபெறவுள்ள நிலையில்,தாஸிம் மௌலவி, கலீல் மௌலவி உள்ளிட்டோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டை செவ்வாய்க்கிழமை 20.12.2022 சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியமிக்க அமைப்பான ஜம்இய்யதுல் உலமா எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அரசியல் ரீதியான தனது தீர்மானங்கள், முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய பிரதிபலிப்புக்கள் குறித்தும் அமைச்சர் எடுத்து விளக்கினார்.13வது திருத்தம் முஸ்லிம் சமூக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்களை எச்சரித்த அவர், இவ்விடயத்தில் முஸ்லிம் எம்பிக்களை ஒரே நிலைப்பாட்டுக்கு கொண்டு வருவதன் அவசியம் ஜம்இய்யதுல் உலமா முக்கியஸ்தர்களுக்கு விளக்கப்பட்டது.

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தையும், ஜனாஸா எரிப்பு முடிச்சுப்போட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரித்த அமைச்சர்,ஒட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்வதற்காக தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் அரச உயர்மட்டங்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து விவரித்தார்.

எதிர்க்கட்சி மனோநிலையில் எந்த நேரமும் செயற்படுவதால்,ஏற்படவுள்ள ஆபத்துக்கள் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்தும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அரசியல் சாராத அமைப்புகள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.



No comments: