News Just In

9/13/2022 10:32:00 PM

விற்பனைக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' பட்டு புடவைகள்!



பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் பல  வர்ணங்களில்  விற்பனைக்கு வந்துள்ளது.

பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டர் முந்தியில், இப்படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி,

ஜெயம்ரவி, பார்த்திபன்,விக்ரம் பிரபு  , போன்ற அனைத்து நடிகர்களின் உருவமும் இடம்பெற்றுள்ள போஸ்டர் தரிக்கப்பட்டுள்ளது.

புடவை முழுவதும் போர் வாள் உள்ளது.இந்த புடவை தற்போது விற்பனைக்கு வந்த தகவல் அறிந்து, புடவையை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

100 முதல் 1000 , 10,000 என்று ஆயிரக்கணக்கில் அவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப புடவை விற்கப்படுகின்றது. 

No comments: