News Just In

8/12/2022 10:48:00 AM

லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனம் நிதியியல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு



தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 320 J ஒல்டன் மற்றும் 320 D ஸ்ரஸ்பி தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, அம்பகமுவ கந்தவேலாசுத சுவாமி ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். இந்நிகழ்வு ஒல்டன் கந்தவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது.

இதற்கான நிதியுதவியினை லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் Neem நிறுவனம் வழங்கி வைத்திருந்தனர். இதனை Friendly Ship Foundation மற்றும் நியூ சண் ஸ்டார் இளைஞர் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்

No comments: