News Just In

8/09/2022 10:09:00 AM

ஊடகவியலாளர்களுக்கான ஊக்குவிப்பு உதவி!





 ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத் திட்டத்தின் கல்குடா மீடியா போரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்மைத்துவம் மற்றும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிக்க ,ச்சூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லும் பல்வேறு ஊடகங்களில் பிராந்திய செய்தியாளர்களாக களப் பணியாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்> முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் இன> மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான "சமூகஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் அவர்களிடம் மட்டக்களப்பு கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்தில் ஊடகவியலாளர்களாக களப்பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் (10.000)வீதம் ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கல்குடா மீடியா போரம் - மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்மைத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைவாக இவ் ஊக்குவிப்புத் தொகை யினை வழங்கும் நிகழ்வு கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் ஏறாவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கள்கிழமை 08.08.2022 இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாறாமௌஜுத்> தேசிய ,ளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் கிழக்கு பிராந்திய ,ணைப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ்> ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம். நளீம்> உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் மாவட்ட ஊடகவியலாளர்கள் சார்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

No comments: