News Just In

8/30/2022 06:14:00 AM

ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தில் 363 மாணவர்கள் கௌரவிப்பு!

கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.அஜ்மீர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2018.2019.2020.2021 ஆகிய ஆண்டுகளில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளை தாண்டிய 105 மாணவர்களும் 100 க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 258 மாணவர்களும் அடங்களாக 363 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வழிகாட்டிய அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில், ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச வைத்தியர்கள், சட்டத்தரணிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: