News Just In

11/07/2025 05:26:00 PM

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான தொகையை அறிவித்தார் ஜனாதிபதி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான தொகையை அறிவித்தார்  ஜனாதிபதி


அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொள்கைகளை நிலைபேறாக நிர்வகிப்பது எமது பொறுப்பாகும். பல ஆண்டுகளாக எழுந்துள்ள சம்பள முரண்பாடுகளையும் அரசாங்க நிதி முகாமைத்துவம் என்பவற்றிலுள்ள சவால்களையும் கருத்திற்கொண்டு, அரசாங்க ஊழியர்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பளம் மற்றும் ஓய்வூதிய குழுவை தாபிப்போம்.

2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2026 ஜனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்

No comments: