News Just In

8/22/2022 09:46:00 AM

இன்றும் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்!





இன்று (22) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40 நிமிடமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஏ முதல் எல் வரையிலும், பி முதல் டபிள்யூ வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், எம், என், ஓ, எக்ஸ், வை, இசட் ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

No comments: