News Just In

6/20/2022 06:28:00 AM

பாரிய மோசடியில் ராஜபக்சவின் மகன்!

நாடு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் பதவியிலிருக்கும் ராஜபக்சவின் மகன் பாரிய எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், நாடு இவ்வளவு நெருக்கடியில் இருக்கும் வேளையில் தற்போது அமைச்சராக இருக்கும் ராஜபக்சவின் மகன் ஒருவரும் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் தொடரும் நெருக்கடி காரணமாக ஜூலை முதல் வாரத்திற்குள் நாட்டை முழுமையாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் இந்தியாவின் தலையீடு தீவிரமாகியுள்ளமையினால் மன்னாரில் உள்ள நான்கு எண்ணெய்க் கிணறுகளையும் இந்தியாவிற்கும், கச்சத்தீவுக்கும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: