News Just In

6/12/2022 10:05:00 AM

அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்! ஐம்பத்தி மூன்று தென்னை மரங்கள் சேதம்!


வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள கேணிமடு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெறுமதியான தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

கேணிமடு பகுதியில் தோட்டம் வைத்து பராமரித்து வரும் சி.முகம்மட்சாலி (வயது 64) என்பவரது தோட்டத்திலுள்ள ஐம்பத்தி மூன்று (53) தென்னை மரங்களை தேசப்படுத்தியுள்ளது.

இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், காய்த்த தென்னை மரங்கள் மற்றும் காய்க்கும் தருவாயில் உள்ள தென்னை மரங்கள், வளர்ந்து வரும் தென்னை மரங்கள் என்பவற்றினை பகுதியளவிலும், முற்றாகவும் சேதமாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட சி.முகம்மட்சாலி தெரிவித்தார்.
சுற்றுவேலியை சேதமாக்கி இரவு வேளையில் யானைகள் வருகை தந்து தேசப்படு;த்தியுள்ளதுடன், நான் சற்று தூக்கத்தில் இருந்ததால் எனக்கு தெரியவில்லை. தொடர்ச்சியாக வருகை தருவதால் உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருவதுடன், பாரிய நஷ்டங்களையும் எதிர்கொண்டுள்ளேன்.

இப்பிரதேசத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையினால் தொடர்ச்சியாக இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும், யானை வேலி அமைத்துள்ள நிலையிலும் வீதியில் அமைக்கப்பட்ட வேலியை பகல் வேலையில் அகற்றினால் இரவு வேளைகளில் உரியவர்கள் மீள பொறுத்தாமையினால் அதனூடக யானைகள் வருகை தருவதாக சி.முகம்மட்சாலி தெரிவித்தார்.

எனவே இதுதொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் யானை வேலியை முறையாக பராமரித்து எங்களது உயிர்களையும், பயிர்களையும் பாதுகாக்க உதவ வேண்டுமென சி.முகம்மட்சாலி வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: