News Just In

4/09/2022 07:34:00 PM

ஏலியனால் கர்ப்பமான பெண்…. பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஆராச்சியாளர்கள்!

ஏலியனால் பெண்ணொருவர் கர்ப்பமாகியுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை சேகரித்து வைத்துள்ள தகவல்களின் ஆவணங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை பெறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல சாட்சிகள் அளித்த தகவலின்படி பல UFOs மனிதர்களுடன் ஏலியன் உறவு கொண்டதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ஏலியன் மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் பென்டகன் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தி சன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

'Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues' என்ற தலைப்பில் அறிக்கையானது அமானுஷ்ய அனுபவங்களைக் கொண்ட மனிதர்களின் உடல்நல பாதிப்புகளை ஆராய்கிறது என்பதும் குறிப்படத்தக்கது.

இதேவேளை, ஏலியன்கள் குறித்த விவாதம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பறக்கும்தட்டு, ஏலியன் பற்றிய கதைகள் யாவும் கற்பனைகள், கட்டுக்கதைகள் என ஒரு சிலர் கூறி வரும் நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: