News Just In

4/28/2022 07:08:00 PM

பரீட்சை திணைக்களத்தினால் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம் (சா/த), உயர்தரம் (உ/த) மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, 2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவித்தார்.

அதேபோல தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் 2022 உயர்தரப் பரீட்சை (A/L) ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: