News Just In

1/15/2022 07:47:00 PM

டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு நாள், ரி20 போட்டிகளில் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். அத்துடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: