News Just In

1/10/2022 06:45:00 AM

தைப்பொங்கலை முன்னிட்டு கிளிநொச்சியில் சிறப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன!

உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகத்துடனும் உவகையுடனும் கோலாலகலமாகக் கொண்டாடி மகிழும் பண்டிகை ஆகும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கிவரும் பொங்கலின் இனிமையும் சுவையும் நாவில் நிறைவதுபோல், அனைவரின் வாழ்விலும் வளங்களும், நலங்களும், களிப்பும் என்றும் பொங்கி வழிபாடு செய்யப்படுகின்றது.

அந்தவகையில், தைப்பொங்கலை முன்னிட்டு கிளிநொச்சியில் - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் சிறப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் கோலாகல தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.

தைமாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

பாரம்பரிய விளையாட்டுக்கள் ,கோலப்போட்டி, விருந்தோம்பல் மற்றும் இன்னிசை நிகழ்வு என்பன மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளன.

இந்த பொங்கல் கொண்டாட்டத்திற்கு அனைவரும் வருகை தந்து பரிசினை அள்ளிச் செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: