News Just In

12/08/2021 06:19:00 AM

அச்சத்தை நீக்கி, புதிய எரிவாயு சந்தைக்கு விநியோகம்!

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, எரிவாயு நிறுவனங்கள் நேற்று(07) புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன.

இதன்படி, லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில் வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்திலான நிறுவனத்தின் வர்த்தக குறியீடு Logo பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

லாப் நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் மூடியில் நீல நிற பின்னணியில்; மஞ்சள் நிறத்திலான நிறுவனத்தின் லோகோ பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு தொகுதிகள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் இருந்து இன்றும் எரிவாயு வெடிப்பு மற்றும் விபத்துக்கள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை காலி, தல்கம்பொல, பன்னல, ஹெட்டிரிப்பு, மற்றும் மாத்தளை யட்டவத்த ஆகிய பிரதேசங்களில் ஆகும். மேலும், பத்தேகம மற்றும் அம்பேகம ஆகிய பிரதேசங்களில்; இன்று எரிவாயு தொடர்பான இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன., கொஸ்கம, கெஸ்பேவ, மீகொட, கொள்ளுப்பிட்டிய, கடுவெல, பலகொல்ல, ராகலை மற்றும் கல்கிரியாகம ஆகிய இடங்களிலும் எரிவாயு தொடர்பான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

No comments: