News Just In

11/09/2021 06:31:00 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 14 ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் இன்று (09) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையேயான சந்திப்பு இடம்பெறவிருந்தது.எனினும், சில முக்கிய விடயங்கள் காரணமாக இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், நாடு முகங்கொடுத்துள்ள இன்னல்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது.


No comments: