News Just In

11/10/2021 08:19:00 PM

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ்கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10 மணி முதல் மூடப்படவுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால், கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் இவ்வாறு குறித்த பகுதி மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியின் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: