News Just In

11/08/2021 06:49:00 PM

நான்காவது கொரோனோ அலை தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை! - இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் நான்காம் கோவிட் அலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கும் எனவும், ஏற்கனவே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த உலகமே நான்காம் அலைக்கு ஆயத்தமாகி வருகின்றது எனவும், இலங்கை அதில் விதிவிலக்காகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கோவிட் தொற்று நிலைமைகளை கருத்திற்கொள்ளாது மக்கள் நடந்து கொள்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்கள் முகக் கவசங்களை அணிந்து செல்ல வேண்டுமெனவும், பிள்ளைகள் முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பதனை பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: