News Just In

11/01/2021 09:28:00 PM

இன்றைய ரி20 போட்டியில் இங்கிலாந்து அணி 163 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய ரி20 உலகக்கிண்ணத் தொடரில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மேற்படி போட்டியில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி குறித்த 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ஜோஸ் பட்லர் 67 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓடங்களைப் பெற்றுள்ளார். இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் குறித்த 20 ஓவர்களில் 164 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: