News Just In

7/04/2021 04:20:00 PM

திருகோணமலையில் யான் ஓயா அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் யான் ஓயா அபிவிருத்தி திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று(4) கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள தலைமையில் நடைபெற்றது.

36 நபர்களுக்காக 40 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டஈடு இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

மொத்தமாக 105 பேருக்கான 96 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டஈடு வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றுள் சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சிலரை வரவழைத்து இந்நட்டஈடுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

ஜனாதிபதியவர்கள் கோமரங்கடவெல பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பலனாக பல அபிவிருத்தி திட்டங்கள் இப்பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்காரணமாக இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் உட்பட உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் ஏற்படும். இதுவரை பல மில்லியன் ரூபாய்க்கள் இப்பிரதேச அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோன், கோமரங்கடவெல பிரதேசசபை தவிசாளர் சந்தன விஜித குமார, அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




No comments: