News Just In

7/26/2021 09:04:00 AM

திருகோணமலையில் வெலிக்கடை படுகொலையின் 38ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு...!!


(எப்.முபாரக்)
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை தொடர்ந்து - ஜூலை 25 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் நடைபெற்ற படுகொலைகளில் ஆயுதப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான தேசப்பிதா தங்கதுரை, தளபதி குட்டிமணி அடங்கலாக 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம் நேற்றாகும்.

வெலிக்கடை படுகொலையின் 38ஆவது நினைவும் நேற்று(25) மாலை திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் வினோநோதராதலிங்கம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசளருமான இந்திரகுமார் பிரசன்னா கட்சியின் இளைஞரணி உப தலைவர் இரத்தினஐயா வேணுராஜ் மற்றும் ஆதரவாளர்களும கலந்து கொண்டனர்.

பொலிஸாரின் தடையை மீறி இந்நிகழ்வு நடாத்தப்பட்டதோடு அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.


No comments: