News Just In

2/18/2021 09:37:00 AM

சர்வதேச தரத்துடனான பிறப்பு சான்றிதழ் பிரதிகளை வழங்கும் பணி ஆரம்பம்!!


திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் சர்வதேச தரத்துடனான பிறப்பு சான்றிதழை உள்ளடக்கிய பிரதிகளை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இந்த சான்றிதழ் கையால் எழுதப்பட்டது. இந்த பிரதிகள் கணனிகள் மூலம் அச்சிடப்பட்டு எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.

இதற்கான திட்டம் நேற்று முன்தினம் (16) திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

No comments: