இரட்டைப் படுகொலை வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரீஎம்விபி) முன்னாள் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்தன் மீதான வழக்கு, திங்கட்கிழமை (01.02.2021) இணையவழியூடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இச்சந்தர்ப்பத்திலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தனை மேலும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் மீண்டும் 2020 நொவெம்பெர் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments: