சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி எனும் தொனிப்பொருளில் அமைந்த நகரை அழகுபடுத்தும் பாரிய வேலைத்திட்டம் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் செயலாளர் எம்.ஆர். சியாஹுல் ஹக் தெரிவித்தார்.
இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூர் நகர சபை, ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் சமூக மட்ட அமைப்புக்கள் இணைந்த இவ்வேலைத் திட்டம் திங்கட்கிழமை 01.02.2021 மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நகர சபைச் செயலாளரின் தலைமையில் இந்நிகழ்வு ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேசபையின் எல்லையில் அமைந்துள்ள ஏறாவூர் அலிகார் தேசியபாடசாலை மைதானத்தை அண்டிய பகுதியில் துவங்கியுள்ளது.
ஏறாவூர் பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதரிகாரி அலுவலகம், ஏறாவூர் நகரசபை, ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை, விவசாயத் திணைக்களம், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி எனும் இந்த பசுமரக்கன்றுகளை நடும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
நகரை அழகுபடுத்தும் இந்த வேலைத்திட்டம் இலங்கையின் சுதந்திரதினமான பெப்ரவரி 4ம் திகதி வரை தொடர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகள் உண்ணாத குறும் மல்லிகைச் செடிகள் இந்த பசுமை வேலைத்திட்டத்தின் கீழ் தெருவோரங்களில் நாட்டப்படுகின்றன.










No comments: