ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஜெனீவாவிற்கான சீனத் தூதர் சென் சூ உரையாற்றும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவா மனிதவுரிமை கூட்டத்தொடரில், மனிதவுரிமை ஆணையாளரினால் இலங்கை தொடர்பான புதிய யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இனங்களுக்கு இடையிலான முறுகலைத் தடுக்கவும், தேசிய ஒற்றுமையை நிலைநாட்டவும் இலங்கை ஒரு பொதுவான திட்டத்தை செயற்ப்படுத்தியிருப்பதாக தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடுகளின் இறையாண்மையையும், அரசியல் சுதந்திரத்தையும் பாதுகாப்பதோடு, ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது மற்றும் அரசியல் செல்வாக்கை செலுத்த முற்படுவதை கைவிட வேண்டுமெனவும் ஜெனீவாவிற்கான சீனத் தூதர் சென் சூ வலியுறுத்தியுள்ளார்.
No comments: