News Just In

2/26/2021 07:35:00 PM

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை வைபவம்!!


ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த ஏ.சி.அஹமட் அப்ஹர் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 01.03.2021 முதல் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளமையை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை வைபவம் பிரதேச செயலாளர் வீ. தவராஜா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதில் உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர் அப்துல் ஹமீட், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த எஸ்.எம்.அல் அமீன் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்









No comments: