News Just In

2/18/2021 08:24:00 AM

நாட்டில் நேற்று 722 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்..!!


நாட்டில் நேற்றைய தினம் 722 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 77,906 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 713 பேர் மினுவாங்கொட - பேலியாகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய ஒன்பது பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 747 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 71,176 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,321 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 617 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் நேற்று (17) உயிரிழந்துள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.

No comments: