News Just In

2/27/2021 09:31:00 AM

கொவிட்-19 மரண சரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான நிபுணர் குழு கூட்டம் இன்று; வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு..!!


கொவிட்-19 தொற்றால் மரணிப்போரின் சரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல்களை தயாரிப்பதற்காக, குறித்த விடயம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இன்று கூடவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வழிகாட்டல்களை அடுத்தவார முற்பகுதியில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பதுடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதற்கமைய இதுவரையில் காணப்பட்ட வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் திருத்தப்படவுள்ளன.

No comments: