பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் கடந்த 25 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 ஆயிரத்து 357 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகர பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பிடியாணை உத்தரவை தவிர்த்து செயற்பட்ட ஆயிரத்து 430சந்தேக நபர்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 562 பேர் மற்றும் வெடிபொருட்களை தம்வசம் வைத்திருந்து 16 சந்தேக நபர்களும் , போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆயிரத்து 108 பேரும், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 607 பேரும், வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவர்கள் 146 பேரும், இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் வாகன ம் செலுத்திய 126 பேர் மற்றும் அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்த 6 ஆயிரத்து 047 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments: