News Just In

2/27/2021 09:15:00 AM

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் விபரங்கள்..!!


நாட்டில் 5 கொவிட்-19 மரணங்கள் நேற்றைய நாளில் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவதகல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியா, மோசமடைந்த சிறுநீரக நோய், உயர் குருதி அழுத்தம் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுடன், குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலைமையே அவரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் சிறுநீரகம் செயலிழந்தமையே அவரின் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடும்பு 9 சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்றுநோய் நிருவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொவிட் நியூமோனியா நீரிழிவு மற்றும் உயர்குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெயாங்கொடையை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர், மஹரகம வைத்தியசாலையில் இருந்து கொவிட் தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து, தேசிய தொற்று நோயியல் நிருவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் நியூமோனியா, குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, புற்று நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: