அவர்களில் 10 பேர் பூநகரியைச் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 379 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 17 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.
5 பேர் வவுனியா வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும், ஏனைய 12 பேர் வட மாகாணத்தைச் சேர்த்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் 10 பேர் பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

No comments: