News Just In

1/30/2021 09:22:00 PM

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்..!!


யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் 29.01.2021 மாலை சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டத்தொடர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.ஏ சுமந்திரன், கௌரவ செல்வராசா கஜேந்திரன்,கௌரவ சண்டிலிப்பாய் பிரதேச சபை தவிசாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர், என பலதரப்பினரின் பங்கேற்புடன் பிரதேச செயலகத்தில் Covid - 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் காணிவிடயங்கள், போக்குவரத்து, கல்வி,மயிலிட்டி மீனவர் பிரச்சனை,வீதி, வாய்க்கால் புனரமைப்பு விடயங்கள், குடிநீர் விநியோகத்தால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.





No comments: