கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினரும், சுகாதாரப் பிரிவினரும் இன்று (29) செவ்வாய்க்கிழமை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
இதில், வியாபார நிலையங்களை பொலிஸாரும், சுகாதார பிரிவினரும் அவதானம் செலுத்தியதோடு, வியாபாரிகளும், நுகர்வோரும் சுகாதார பழக்கவழக்கங்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதனையும் அவதானித்தனர்.
அத்தோடு, குறித்த பகுதியில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய பலருக்கு பொலிஸார் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சுற்றிவளைப்பில் முறையாக முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








No comments: