News Just In

12/30/2020 06:56:00 AM

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி- மொத்த எண்ணிக்கை 195ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments: