News Just In

12/23/2020 11:13:00 AM

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரவள்ளி தோட்டம் - அதிகாரிகளின் அசமந்தப்போக்கு...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையைடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் செய்கை செய்யப்பட்ட வயல் நிலங்களும், மரவள்ளி தோட்டமும் சேமடைந்துள்ளதாக பாதிப்படைந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக இப்பிரதேசத்தில் பெய்து வந்த மழை காரணமாக புணாணை அனைக்கட்டுக்களை உடைக்கும் நிலையில் உள்ளதாக புணாணை அனைக்கட்டில் கடமையில் இருந்த அதிகாரியிடம் முறையிட்டும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மரவள்ளித் தோட்ட உரிமையாளர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதனால் பொத்தானை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்து அனைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் வாய்ப்புள்ளது. வான் கதவுகளை திறந்து விட்டால் நீர் மட்டம் குறையும் என்று புணாணை அனைக்கட்டுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியிடம் முறையிட்டேன். அதை நான் செய்ய முடியாது மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் தான் கதவுகள் திறக்க முடியும் என்று சொன்னார்.

நீர்பாசனத் திணைக்களம் காலங்காலமாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீர் அணைக்கட்டுகள் உடைப்பதற்கு அதிகாரிகளின் கவலையினமே காரணம் அரச சொத்துக்களை வீண்விரயம்; செய்வது இவ்வாறான சில அதிகாரிகளே.

நான் சென்று முறையிட்ட சமயம்; அதிகாரிகள் கவனம் செலுத்தி வான் கதவுகள் திறந்து நீர் செல்வதற்கு வழி வகுத்திருந்தால் அனைக்கட்டுகள் நீரினால் உடைபடாமல் இருப்பதுடன் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் தோட்டங்களும் பாதுகாக்கப்படும் என்று எண்ணுகிறேன்.

கடமையில் இருந்தவரிடம் போய் முறையிட்ட போது அவர் எனது கருத்தை ஏற்று உடனடியாக மேலதிகாரிக்கு தகவலை சொல்லி வான் கதவை திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து இருப்பார் என்றால் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன், எனது மரவள்ளி தோட்டமும் நீரினால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.








No comments: