News Just In

12/30/2020 08:11:00 AM

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களும் உயிரிழப்புக்களும் முழு விபரம் வெளியாகியது!!


இலங்கையில் நேற்றைய தினம் மொத்தமாக 460 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 418 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 35 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 42,063 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட - மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 38,343 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 704 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 33,925 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 7,943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 620 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

அதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 195 ஆக பதிவாகியுள்ளது.

01. வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2020 டிசம்பர் 28 ஆம் திகதி உயிரிழந்தார். உயிரிழப்புக்கான காரணம் கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் சிக்கலான சிறுநீரக நோய் தொற்று நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: