News Just In

7/09/2025 10:03:00 AM

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்

செம்மணி அவலத்தை விடுதலைப் புலிகள் மீது திசைதிருப்ப தமிழர் தாயகத்தில் நடக்கும் சதி! அநுர அரசுக்கும் சிக்கல்


செம்மணியில் எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்று தமிழர் தாயகத்தில் பரப்பும் திட்டமிட்ட சதி நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி - சித்துப்பாத்தி ஒரு இந்து மயானம் என்ற அடிப்படையில் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மைகள் திசைத் திருப்பப்படுகின்றன என சுகாஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், உண்மையில், தற்போது எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் குடும்பங்களாக கொலை செய்யப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், செம்மணி விவகாரத்தில் தங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் வரலாம் என்ற அச்சத்தில் அநுர அரசாங்கம் தற்போது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: