News Just In

5/12/2025 10:54:00 AM

என் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான நாள்: ஆகாஷ் ஏவுகணை விஞ்ஞானி பிரகலாத் பெருமிதம்!

என் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான நாள்: ஆகாஷ் ஏவுகணை விஞ்ஞானி பிரகலாத் பெருமிதம்



புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​திய முப்​படைகளும் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின. அதன்​பிறகு, இந்​தி​யா​வின் 15 நகரங்​களை குறிவைத்து கடந்த 8 மற்​றும் 9-ம் தேதி​களில் ட்ரோன்​கள், ஏவு​கணை​களை பாகிஸ்​தான் வீசி​யது.

ஆனால், அவை அனைத்​தை​யும் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட ஆகாஷ் ஏவு​கணை​கள் வானத்​திலேயே தவிடு பொடியாக்கின. இந்த ஆகாஷ் ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகத்​தின் (டிஆர்​டிஓ) விஞ்​ஞானி டாக்டர் பிரகலாத் ராமா​ராவ்​தான் உரு​வாக்கி உள்​ளார்.

இந்​தி​யா​வின் ஏவு​கணை விஞ்​ஞானி என்று புகழப்​படும் டாக்​டர் அப்​துல் கலாம்​தான், ஆகாஷ் ஏவு​கணை திட்​டத்​தின் இயக்​குந​ராக டாக்​டர் பிரகலாத் ராமா​ராவை தேர்ந்​தெடுத்​துள்​ளார். கடந்த 15 ஆண்​டு​களுக்கு முன்​னர் தொடங்​கப்​பட்ட ஆகாஷ் திட்​டத்​தில் மிக குறைந்த வயதுள்ள இயக்​குந​ராக பிரகலாத் பணி​யாற்​றி​னார்இதுகுறித்து தொலைக்​காட்​சிக்கு பேட்டி அளித்த விஞ்​ஞானி பிரகலாத் மேலும் கூறிய​தாவது: வான் வழி​யாக எதிரி​கள் நடத்​தும் தாக்​குதலை எதிர்​கொள்ள ஆகாஷ் ஏவு​கணை​கள் உரு​வாக்​கப்​பட்​டன. அதை உரு​வாக்​கு​வ​தில் நானும் உதவி​யிருக்​கிறேன் என்​பதை நினைக்​கும்போது பெரு​மித​மாக உள்​ளது.

பாகிஸ்​தான் ட்ரோன்​கள், ஏவு​கணை​களை ஆகாஷ் தாக்கி அழித்த அந்த நாள்​தான் எனது வாழ்க்​கை​யில் மிக​வும் மகிழ்ச்​சி​யான நாள். ஆகாஷ் ஏவு​கணை மிக​வும் வேக​மானது, ஆபத்​தானது. பாகிஸ்​தானுட​னான மோதலின் போது நாங்​கள் எதிர்​பார்த்​ததை விட மிக​வும் அற்​புத​மாக ஆகாஷ் ஏவு​கணை செய​லாற்றி உள்​ளது.

மிக வேக​மாக வரும் எதிரி​களின் ட்ரோன்​கள், ஏவு​கணை​கள், ஹெலி​காப்​டர்​கள், இன்​னும் சொல்ல போனால் எப்16 போன்ற போர் விமானங்​களை​யும் கூட வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்​கும் வகை​யில் ஆகாஷ் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஆகாஷ் ஏவு​கணை​களை டிஆர்​டிஓ மற்​றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறு​வனங்​கள் இணைந்து தயாரித்​தன.

இது​தான் இந்​தி​யா​வின் வான் பாது​காப்​புக்கு மிக முக்​கிய​மான​தாக மாறி இருக்​கிறது. இந்த ஏவு​கணையை எங்கு வேண்​டு​மா​னாலும் எடுத்து செல்ல முடி​யும். மிக வேக​மானது, பயங்​கர​மானது. 80 கி.மீ தொலை​வில் உள்ள இலக்கை இடைமறித்து தாக்கி அழிக்​கும் வல்​லமை படைத்​தது. ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​வின் முப்​படைகளி​லும் சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் இந்த ஏவு​கணை​களை வாங்க அர்​மீனியா ஆர்​டர் வழங்கி உள்​ளது. இதன் விலை மிக​வும் குறைவு. பயன்​படுத்​து​வது எளிமை​யானது, சிறந்த செயல்​பாடு கொண்​டது. இதனால் இந்த ஏவு​கணை​களை வாங்க உலகள​வில் பல நாடு​கள் முயற்​சித்து வரு​கின்​றன. இவ்​வாறு விஞ்​ஞானி பிரகலாத் ரா​மா​ராவ் கூறி​னார்

No comments: