News Just In

12/30/2020 09:48:00 AM

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு- கிழக்கில் ஆறாவது மரணமாக பதிவாகியது!!


மட்டக்களப்பில் இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வவுணதீவு பிரதேசத்தின் கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மரணத்திற்கு முன்னரே கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவாறாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மரணத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறாவது மரணமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: